சந்த கவி இலக்கம் 141
“பெண்மையை போற்றுவோம்”
தச அவதாரத்தையும் தவமென நினைத்தவள் பத்தியம் காத்தவள் பட்டினி கிடந்தவள்
பட்டது தொட்டது கொஞ்சமா நெஞ்சமா
சேலையில் தொட்டில் கட்டி தொட்டிலை ஆட்டி
சேந்து இருந்து வாழ்ந்த வாழ்க்கை
சேற்றில் கால் வைத்து
சோற்றில் கை வைத்த பெண்!
தன் குழந்தையை
தோழியிடம் கொடுத்து கண்ணியம்
பெண்ணியம் காத்து
போர்களத்தில் களமாடி மடிந்த வீரப்பெண்கள்!
கணவன் வித்துடலை
தோழ்களில் சுமந்து
விதைத்தையிட்டு
விரைவாய் குழந்தைகளை அணைத்தபடி மக்களுடன் மக்களாய்
வீரமுடன் வந்த வீரப்பெண்!
உறுதியான உள்ளத்துடன்
உலகை வலம் வரும் வீரப் பெண்கள்!
நன்றி
வணக்கம்