சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_139

“பகலவன்”
பனியின் பகைவனாய்
நிலவின் துணைவனாய் கோள்களின் தலைவனாய்
பார் எங்கும் ஒளிரும் பகலவனே!

வெய்யோன் மறைந்து
உதித்தான்
அகிலம் காக்க ஒளி
உடையான்
அனலாய் கொதித்து
அண்டம் காக்கும் ஒளியான்
பரிதி!

உன்வரவு கண்டு
சோலார் மின் இணைப்பை தந்திட
மின் இணைப்பு கருவி
இயங்கிட
இல்லங்களில் உள்ளங்களில்
மகிழ்ச்சி பொங்கிட
உலகெங்கும் உன் சேவை பெருகிட
பெருமகிழ்ச்சியில்
நாமும் நன்றியுடன்
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
02.03.24