சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_124

“மாவீரரே”
வெண்குருதி சிந்தி
செங்குருதியில் நனைந்த மாவீரர்களே
செய் அல்லது செத்துமடி என்ற
நெப்போலியன் கூற்றை கூறு போட்டவர்களே

எறிகணையில் எரிமலையாய் வெடித்தீர்கள்
எறிகணையில் விழுப்புண் அடைந்தீர்கள் பாதிவழி கடந்த போது சாவுமணி அடித்த
எம் தோழர்களே தோழிகளே

மீண்டு பிழைத்தால்
எம் தேசத்தை பார்ப்பனா என்ற கனவோடு
உயிர் நீத்த உத்தமர்களே

கல்லறைகள் கதைபேசும்
காவியங்கள் உருவாகும் என எண்ணிய காக்கை வன்னியன் கூட்டம்
காவு கொண்டது
கல்லறைகளை மட்டுமா காவியநாயகர்களை
அழித்தது ஒழித்தது!!
நன்றி
வணக்கம்