சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_123

“ஆறு மனமே”
தாய்க்கு தாயாக இருந்து எம்மை வளத்தவள் அக்கா
அவள் அரவணைப்பில் ஆயிரம் அர்த்தங்கள்
அம்மாவுக்கு
நிகராய்
எம் சுமைகளை சுமந்தவள்
சுகம் தந்தவள்

தோழுக்கு தோள் கொடுத்தவள் தோழியாய் தோழில் எமை சுமந்தவள்
சுவையாய் உணவை சமைத்து தந்தவள்
உள்ளத்தில் உணர்விலும் நின்றவள் அக்கா ஆறுமா மனம் ஆறுமோ

செல்லும் இடம் எல்லாம் எம்மை அழைத்து செல்வாள் பார்ப்பவர் கண் கூடபட்டு போகும்
அன்றும் இன்றும் தாயாக எமை அணைக்கின்றாள் ஆறுது மனமே!

அத்தனை சமையலையும் தானே சமைத்தாள் அக்கா
உடன் பிறப்புக்களை இருக்க வைத்து உணவு பரிமாறினாள் அவளின் முகத்தில் புன்னகை பூக்களாய் மலர்ந்தது
முழு நிலா போல் பிரகாசித்து நின்றாள்
அந்த ஒளியில் நாமும் படுத்து உறங்கினோம் சேர்ந்து மனிதன் வாழும் வகையில் ஆறிடும் மனம் ஆறிடும்
விடுமுறையை அனுபவித்து மனம் ஆறி வந்தோம்
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்