சந்த கவி
இலக்கம்_177
“மாசி”
மாசி மகம்
பிறவி பெரும் கடலில் வீழ்ந்து
துன்ப கடலில் மாய்ந்து
ஆன்மா இறைவனது
அருட்கடலாகிய இன்ப வெள்ளத்தில் அமிழ்ந்து
திளைக்க செய்யும் நன்னாள் மாசி மகம்!
மகாசிவராத்திரி
அப்பனுக்கு ஒருநாள்
அம்மைக்கு பலநாள்!
மாசி கடும் குளிர்
குளிரை கொண்டாடும் சளி காச்சல் இருமல் ஊர்ரெல்லாம் நோய்
நொந்து போகும் மக்கள்!
குளிரை முண்டி அடிக்குது காற்று
மழை வெள்ளம்
இருளை அகற்றிட
சூரிய பகவானின் ஒளி ஏங்கி தவிக்கும் மனசு !
பசுமையை தேடுது காடு
பனி துளியில் நனையிது புதர்கள்
பனியில் விலகி நிற்கும் பறவைகள்
ஊர்விட்டு ஊர் சென்றிடும்!
குறைமாதத்தை நிறைவாக்கி
பங்குனியை
விரைவாக்கி
நேரமாற்றத்தை எதிர்பாத்து காத்திருக்கும் காலங்கள்!
நன்றி
சிவாஜினி
சிறிதரன்
01.02.25