சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_176
“கவி அழகு”
கண்ணுக்கு மையழகு
கவிக்கு பொய்யழகு
பெண்ணுக்கு பொன்னழகு
விண்ணுக்கு
விண்மீன்னழகு!

கவிக்கு கற்பனையழகு காதோரம் கேட்கும் திறனாய்வழகு புதைந்திருக்கும் புதிர்களை
சந்தத்தில் சிந்தி சங்கதி பேசும் பேனா
முனையழகு!

கவிஞனுக்கு
பேனா முனை ஆயுதம்
ஆராய்ந்து பதம் பாத்து சிந்தித்து செயலாற்றி
பார்பவரை காதல் கொள்ளும் கவி அழகு!

உருவம் அறியா கருவிலும்
என்னை காதல் செய்த அம்மா நீ அழகு!

முதலில் பேசி பழகியது அப்பா
முரன்பட்டு எழுதி பழகிய அப்பா அழகு!

இடது கையால் சாப்பிட
கோவப்பட்டு
மாற்றி எனை தேற்றி சாப்பிட வைத்த அப்பாவும் ஆழகு!

கோவத்தில் வரும் பாசம் அழகு அப்பா!

முன் பின் முரன்பட்டால்
ஒப்பனையான பொன்மொழி சொல்லிடும் அப்பனும் அம்மையும் அழகுதேவதையே!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
25.02.25