சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம் _173

“இதயம்”

இதயமே என்
இதயமே
எம்மை இயங்க வைக்கும் இதயமே
முச்சுக்கு நீயே முன்னுரை
பேச்சுக்கு நீயே பெருந்தகை!

ஒரு நிமிடம்
நீ துடிக்க மறுத்தால்
நான் இல்லை
உனை நான்
கவனிக்க மறுத்தால் நீ இல்லை!

உன் சேவை
பெரும் சேவை
பெருமிதம்
கொள்கிறேன் பேர் அன்புடன்!

இதயத்தின்
வழியாக
இரத்த ஓட்டத்தை
ஓழுங்கு படுத்தி
இதய வால்புக்கு
முக்கிய பங்கு இங்கு!

உணவை மருந்தாக்கு
உடல் பயிற்சியை விருந்தாக்கு
உடல் எடையை குறைத்திடு
ஊக்கத்தை கைவிடாதே!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
15.12.24