சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_172

“.ஈரம்”
ஈரம் இல்ல நெஞ்சம்
பாசம் இல்ல
உள்ளம்
நேசம் இல்லா நட்பு
வேசம் போடும் மானிடன்!

ஈரம் கசியுது
பாசம் உருகிது
வேசத்தில் என்ன வாசம்
கோசம் போடும் கோலம்!

கன மழை வெள்ளம்
காற்றின் வேகம்
பெரு வெள்ள பெருக்கு
பதறும் மக்கள்!

கொட்டி தீர்க்குது
கொட்டிலை
பிடுங்குது காற்று
கதறி அழும்
மக்கள்
காலம் போடுது கோலம்!

ஈரம் கயல்ல
இயற்கை
இரக்கமும்
காட்டல்ல
பயிர் செடிகொடிகள் வெள்ளத்தோடு வெள்ளமாய்
பள்ளத்தோடு
பள்ளமாய் பாயுது பாரீர்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
07.12.24