சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_171

“பனிப் பூ”

பூம்பனி பூக்குது
பூ இதழ் நோகுது பாலர் மகிழ்ந்திட
பாவலர் பயந்திட

மாலை பொழுதது
மணலாய் பூம்பனி
வாரி கொட்டுது
அழகு தரையது

உப்பு விளை நிலம்
உவர்ப்பு கசி நிலம்
வரிசை வரிசையாய்
சிற்றூந்து ஊந்தது

விடிகாலை பொழுது
கும்மெண்ட
இருட்டு
நகரசபை பணியாளர்
வாரி அள்ளி
கொட்டினம்

தத்தமது சேவையை
செவ்வனே
செய்யினம்

பள்ளி மாணவர்கள்
கூச்சலிட்டபடி கூடி மகிழ்ந்தபடி செல்லினம்

மின் விளக்கு
ஒளிர மறுக்குது
பூம்பனியால் மூடி
பணக்கார நாடுகள்
இயற்கைக்கு
சவாலாய்
சாலையை
சரிபாத்து
தடைகளை
உடைக்கினம் உதவினம்
உன்னத பணியது!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
30.11.24