சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_
162

“வெற்றி பயணம்”

இலட்சிய கனவு
இலக்கு நோக்கி பயணி
பாதை மாறாமல்
பயணிப்பது
பண்படும் வெற்றி !

காச்ச மரம் தான்
கல்லறி வேண்டுமா?
கட்டிய வீடும்
கல்லறி வேண்டும்
பாம்பை போல் செட்டையை
அந்த இடத்தில் களட்டிடு
காயங்கள் மாறிட
கோலங்கள் போட்டிடு!

முயற்சியை முலதனம் ஆக்கி
முன்னோக்கி
ஓடு
ஓய்ந்து போகாதே!

பவக்காய் மட்டும் தான்
கசக்குமா?
மானிடர் செயல்களும்
கசக்கும்
வீழ்ந்திட முடியாது
வீர நடை போடு
வெற்றி பயணம் தொடரும்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
30.09.24