சந்த கவி
இலக்கம்_161
“விடியுமா தேசம்”
இலகு காத்த கிளி போல
எத்தனை காலம் காத்திருந்து பாத்திருந்து
காலங்கள்
கரைந்து போனதடி
பூத்திருந்து
பூ இதழ் நோகுது!
வஞ்சி மகள்
வாழ்ந்தது
எல்லாம் கண்ணீர் கோலம்
மாலை ஒன்று தொடுத்து வைத்தேன்
அண்ணனுக்காக!
இயற்கையை நண்பன் ஆக்கினான்
வாழ்க்கை தனது தத்துவசிரிய
என்றார்
வரலாறு தனது வழிகாட்டியாக கொண்டு
ஈழ மக்களுக்காக இறுதிவரை போராடினார் மடிந்தால் மண்ணுக்காக வீழ்ந்தால்
வித்துக்காக
என இடித்துரைத்தார்
இன்றும் காதில் கேட்கின்றது!
இப்படி ஒரு தலைவன் வந்தால் கணப்பொழுது விடிந்திடுமே நம் தேசம்!
ஆட்சி மாறியது ஆனந்தம் தான்
கைக்கு வருமுன் நெய்க்கு விலை பேச
முடியது!
ஊழல் இல்லாத அரசு
மோசடி லஞ்சம்
இனப்பாகுபாடு
மதங்களுக்கு இடையிலான முரன்பாடு
இல்லாத போது
விடிந்திடுமா
தேசம்!
நன்றி வணக்கம் சிவாஜினி சிறிதரன்
23.09.24