சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_160

தேர்தல்
வாக்கெடுப்புக்கு
வால் ஆட்டும்
வேட்பாளர்
பொய் சொல்லி
பேராசை காட்டி
பேரம் பேசி
வாலாட்டும்
பேய்கள்!!

பணத்தால்
வாக்காளர்
வாக்குக்களை திருடி
வெற்றி பெற்று
பதவி ஏற்று
பணத்தை சுருட்டி
கைக்குள் கொண்டு

பணக்காரன்
பட்டியலில்
இடம் பிடிப்பது தான்
ஜனாதிபதி தேர்தல்

1948 இலங்கை
சுதந்திரம்
பெற்று
ஜனதிபதி இருக்கையில் இருந்தவர்
என்ன நல்லது
செய்தார்கள்?

யார் வந்தால்
என்ன
தமிழனுக்கான நல்லாட்சி
நடக்க போவது இல்லை
நடக்கிறத மட்டும்
கையை கட்டிக்கொண்டு நின்று
பார்க்க போவினம்

புத்தி ஜீவிகள்
கல்விமான்கள் அறிஞர்கள்
எண்ணுகின்றார்களா
தமிழ் இனத்திற்கு
நல்லவை செய்து
எம்மினம் வாழ வழி சமைத்தார்களா?

தமிழன் என்ற ஒர் இனம்
அன்னி தேசத்தில்
நிம்மதியாக
வாழ காரணம்
உயிர் நீத்த
மாவீரர்களின் உன்னத
தியாகம் !

அது துடிப்பு
உள்ளவனுக்கு மட்டும் தான் துடிக்கும்
பணம் வேண்டுமா
புகழ் வேண்டுமா
எது நிலைக்கும்?
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
15.09.24