சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_159

“வலி”

வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோரை
வலி சுமந்து
தேடும் உறவுகள்
உடன் பிறப்புக்கள்!

ஊர் கூடி
உறவு கூடி
கொந்தளித்து என்ன பயன்?
பாப்பார் கேட்பார்
யாரும் இல்லை!

வெள்ளை கொடியுடன் சென்ற
வெண்புறாக்கள் எங்கே?
கையில் கொடுத்த பிள்ளைகள்
கைமாறி போனதேனோ?

எத்தனை ஆண்டுகள்
கடந்தாலென்ன நினைவுகளை
மனதில் சுமக்கும் வலி!

மனிதன் மிருகமாகி
மனிதனை
மனிதன்
வேட்டையாடி
மானிடனை சுட்டெரித்து
மாந்தரை துன்புறுத்தி!

பெண்களை
வன்கொடுமைக்கு உட்படுத்தி
வலி மேல் வலி கொடுத்து
வேதனை சோதனை பார்க்க முடியல்லயே!
ஏன் இந்த
கொடுர
வலியை கொடுக்கும்
கோளைகளுக்கு
மரணதண்டனை கொடுக்கல்லேயே
கோர நயவஞ்சகர்
கொடுரமாய்
வலி சுமக்கட்டும்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
07.09.24