சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_157

“கோடை காலம்”
பகலவன் வருகை
பார்வைக்கு மிக அழகு
பசுமையை
நிறைந்த பூமி
பாலரின் பரபரப்பு!

கோடையை கண்டு
கொண்டாடும் வாழை
வாசல் முன்பு
நின்று
வரவேற்பு கூறுது!

வீட்டு தோட்டமது
விதம் விதமாய்
நாற்று நடுகை
கத்தரி மிளகாய் கீரை
பாகல் பயிற்றை!

வெங்காயம்
விருப்பப்பட்டு நாட்டி
வெங்காய பூ
வறுத்தாச்சு
அறுவடையும்
செய்தாச்சு!

கோடை வெயில் ஒருபுறம்
கொட்டும் மழை மறுபுறம்
கொண்டாட்ட திருவிழா
கோலாகல பெருவிழா!

பூக்களின் மலர்வு
பாக்கவும் அழகு
முற்றத்து வெயில்
முதுகில சுடுகிது!

நீண்ட பகல் பொழுது
நித்தம் நடைபோட்டு
பசுமையை பார்த்து
பலகதை பேசி மகிழ்ந்து !

இப்படி தொடர்ந்தால்
எப்படி இருக்கும் என
கனவு காண்கின்றேன் .
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
03.08.24