சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_156

“விடுமுறை”

விடுமுறை விடுமுறை
கோடை விடுமுறை
கூடி கும்மாளித்த விடுமுறை!

நான்கு நாள்
மச்சாள் சமையல்
நாவூற சாப்பிட்டு மகிழ்ந்தேன்
நாலு பாத்திரம் தேய்த்து கழுவினான் தம்பி
நான்கு மெசின் உடுப்பு தோய்த்து வெயிலில் காயவிட்டார் கணவர்!

சுவைக்கு சுவை சேர்க்கும் கேக் செய்தாள் குட்டிமகள்
வீடு கூட்டி பெருக்கினார்கள் என் ஆண்வாரிசுகள்!

காரசாரமான
கடலுணவு
காரல் மீன் குளம்பு
காத்திருந்து பாத்திருக்க
சமைத்தாள் மருமகள்
சுவைத்து உண்டோமே!

ஊர்கூடி உறவு கூடி
நிலா பாத்து
பட்டகதை உற்றகதை பேசி
கொத்துரட்டி கொத்தினான் பொறாமகன்
காரசாரமாய்
உறைக்க உறைக்க
உண்டு மகிழ்ந்தோம்!

வெப்பத்தை
தணிக்க
ஆற்றங்கரை சென்றோமே
அலாதிம்பிரியத்துடன்
காத்து வாங்கினோமே
கலகலப்பாய் பேசி குளிர்பானம்
குடித்தோமே!

அடுத்த
சந்ததியும்
ஆலாதிப் பிரியத்துடன்முற்றத்து வெயிலில்
ஆடிபாடி கதைத்து மகிந்து விடுமுறை கழிந்தது
மகிழ்வும் வந்தது!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்