சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

.சந்த கவி
இலக்கம்_ 155

“அத்திவாரம்”
தந்தையும் தாயும் போட்ட அத்திவாரம்
கட்டிடம் சரியாக எழும்பி
ஆலமரத்தின் ஆணி
வேர்கள்
நாம் நிமிர்ந்து நிற்கின்றோம் உயர்ந்து
நிக்கின்றோம் !

தர்மத்தின் தலைவன் தந்தை
தாய்தேசத்தின் ஊற்று
தாய்மை
நிறைந்த உள்ளம் அன்னை
தன்மானத்தின் தோற்றம்!

தேடி வைத்த சொத்து
தேர்ந்து எடுத்த முத்து
தேசம் கடந்தாலும்
தேய்ந்து போகாத முத்து!

பத்து பிள்ளைகளை
பக்குவப்படுத்தி
பத்தியம் காத்து
பத்ததி சொல்லி வளர்த்த
பெருமைக்குரிய பெற்றவர் போட்ட அத்திவாரம்
சரியாக இருந்தமையால்
கட்டடம் தடுமாறாமல்
தளம்பாமல் எழும்பியது
இதை பேணி
பாதுகாப்பது
எம் பொறுப்பு
எம் துறப்பு!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
06.07.24