சந்தம் சிந்தும் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

பங்கு நீ
ஃஃஃஃஃ
தங்கு தடையின்றிப் பங்கு நீயானாய் //
வங்கக் கடலிலே விளைந்ந வலம்புரியே //
சங்கம் தளைத்திட சாய்ந்து விளையாடி //
பொங்கும் உள்ளத்தில் புதுமலர் நீயானாய்//
கங்குல் பகலிரவும் பார்த்தும் நிற்பேனே //
மங்கும் நிலையின்றி மகாராசி நீயுமடி //
அங்கம் குளிருதடி ஆனந்தம் மிளிருமடி //
பங்கமும் நேராமல் பார்த்தும் நிற்பேனடி //

எங்கும் துலங்கும் ஏற்றமும் தேடிவரும் //

சிங்கம் நானுமடி சினுங்காமல் வந்தேனே//

சங்கும் இசைக்குமடி சாகித்தியம் பேசுமடி //
இங்கிதம் கொண்டவளே இளமானே கஸ்தூரி //

நங்கூரம் போட்டேன் நகராதே தயக்கமில்லை //

பங்காகப் பாகாய் சரிபாகமும் உனக்குத்தானே//

சிவருபன் சர்வேஸ்வரி