சந்தம் சிந்தும் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

ஈரம்
ஃஃஃஃ

ஈரமில்லாத மனமுமுண்டோ ஈகையில்லாத குணமுமுண்டோ //
வாகைசூடாத மனிதமுண்டோ வாழநினைக்காத இதயமுண்டோ//
பாதைதெரியாமல் பயணமுண்டோ பண்புதெரியாத நடையுமுண்டோ //

உண்மைதெரியாமல் நடப்பதுண்டோ உரிமைதனை மறப்பதுண்டோ //

தொன்மையை மறக்கும் நிலையுமுண்டோ //
தோல்வியைக் கண்டும் அச்சமுண்டோ கேளாய் //
உயர்வாயெழுவாய் ஊக்கம்கொண்டே பகர்வாயென்றும் பாசத்துடன் //
இயல்பாய் இசைவாய் ஈரமும் சுட்டிடவே //

செயலாய் செம்மையாய் செங்கதிராய் இலங்கிடவே //

நயமாய் நன்மையை நயந்திடவே என்றும் //
சுயமாய் தோன்றட்டும் சுதந்திரம் உனக்கும் //

சிவருபன் சர்வேஸ்வரி