காவியம் படைப்போம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நாளுமே நன்னெறி கற்றுமே நிற்போம் //
நாட்டிலே நன்மைகள் செய்துமே வருவோம் //
நல்லது தீயது அறிந்துமே கொள்வோம் //
நாளைய சந்ததிக்கு நல்வழியும் காட்டுவோம் //
வெற்றியும் தோல்வியும் வருவது சகயம் //
வெஞ்சினம் இல்லாத நெஞ்சினைப் பெறுவோம் //
வெட்டியாய் திரிவதை விட்டுமே நிற்ப்போம் //
வேளையும் இதுதான் ஒன்றாக இணைவோம் //
கவலையும் இன்றியே காப்பாய் கண்ணியம் //
கருத்து மோதலின்றியே ஏற்ப்பாய் சமாதானம் //
கடமையும் ஓங்கிடப் பாதையும் பார்ப்பாய் //
காலத்தில் நீயும் காவியம் படைப்பாய் //
ஆதலினால் காதல் செய்வீர் வாராய் //
ஆகாயம் பூமியும் பொறுமையின் சிகரம் //
ஆணவம் இன்றியே அகிலத்தை ஆழ்வாய் //
ஆணித்தரமான அறத்தையும் அகத்தினில் கொள்வாய் //
ஆனந்த கீதமும் இசைக்கும் நாட்டிலே //
சிவருபன் சர்வேஸ்வரி