விடியுமா தேசம்
ஃஃஃஃஃஃஃஃஃ
விடியுமா தேசம் பார்புள்ள விடியுமே தேசம்
வாடிபுள்ள இராசாத்தி சங்கதி கேட்டுக்கோ
இயற்கை தந்தது வாழ்வு உனக்கேன் இறுமாப்பு
சுவரு இருந்தால் சித்திரம் வரையலாம்
கவருவைச்சு என்னபண்ணப் போறே
எவருதான் பொறுப்பு தீர்மாணிப்பது துருப்பு
பவருதான் வேண்டும்
பகடுமே வேண்டாம் தங்கம்
காஞ்சமாடு கம்பிலே விழுகுதாம் சோம்பலின்றியே
சுதந்திரம் நமக்கு நன்மையாய் வரட்டும் //
காடும் மேடும் களனியும் இருக்கு
பூவும் பிஞ்சும் மரத்திலே வரும்தானே
வரட்டும் வைரமும் உடைவது கயிட்டம்
சுக்குநூறு ஆகாமல்
விடியட்டும் தேசம்புள்ள
சிவருபன் சர்வேஸ்வரி