சந்தம் சிந்தும் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

கனவுகள் நனவாகப் போராட்டம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

கல்விப் படியிலே காலடியும் பதித்து //
காலமென்னும் படகினிலே கனிந்து நின்று //

கற்பதே சிறப்பெனக் கடமையும் தொடர்ந்து //
கனவுகள் நனவாக எத்தனை போராட்டம் //

கோணாத எண்ணமும் அழியாத கொள்கையும் //
மாறாத இலட்சியமும் மறக்காத வரமுறையும் //

தேறவே மனதிலே தேர்ச்சியும் ஊறிவிடவும் //

காணும் துன்பங்கள் சூழ்ந்த போதும்//

தோணும் திடத்தைக் குன்றவும் விடாமல் //
சாதனை செய்யவே சோதனைகளை வென்றும் //
நிமிர்ந்து நிற்பதே சாலவும் சிறப்பென்று //

திடமும் தீர்க்கமானதும் வெற்றியே நினைவு //

சிவருபன் சர்வேஸ்வரி