சந்தம் சிந்தும் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

ஆறுதலே வானம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அன்பினிலே பாத்தி கட்டி அவசரமாக நடை பயின்றோம் //

இன்பமுடன் பேசியும் இகமதில் மகிழ்ந்தோம் நாமும்//

இனிமை பொங்கும் நாட்கள் எல்லாம் இருண்ட வானம் ஆகியதே//

வெள்ளை மனமும் உந்தனுக்கு கள்ள இன்றிக் கதைத்தாயே //

சொல்ல மறந்த கதைகள் எத்தனை சொல்லாது எங்கு போனாய் //

எப்படிச் சொல்வேன் எனதுயிரே கேட்பாய் //

செங்கதிராக என்னோடு ஒளிவீசியும் நடப்பாய் என்றே பெரும் கனவு //

காலம் போட்ட கோலம் என்னடா கவலையில் மூழ்கவும் விட்டதே //

வானத்து விண் மீனுக்கு வந்ததோ சோதனை//
சாதனை இன்றியே சுரம் எப்படி
அணைந்தும் போனதே

பட்டமரம் துளிர்க்குமா, பரிசமும் போடலாமா ஏலம் போட முடியுமா //

ஆறுதலே வானமா அணங்குவின் எண்ணமும் வீணா //

சிவருபன் சர்வேஸ்வரி