சந்தம் சிந்தும் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

போரில்லா நல்லுலகம் வேண்டும்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

காணும் இன்பம் கனிந்திடும் எண்ணம் காசினியில் நிலவிடவும் //

வேணும் எங்கள் வேதனைகள் தீர்க்கும் தீதறியாத உலகமும் //

சூழும்கலிகள் சூழ்ச்சிகள் எல்லாம் மாறிடவும் வேண்டும் //

மனங்கள் குளிர்ந்து மானிலம் சிறந்து நடைபயில்வதுவும் நன்றே //

வேறுபட்ட எண்ணங்களாலே போர்தொடுத்து வெந்துமடிதல் வேண்டாம் //

உண்டு மகிழ்ந்து உலாவியும் வரவே தங்குதடைகள் உடையட்டுமே எங்கும் //

பொங்கும் மனதில் புதுமைகள் துள்ளவும் நின்றே நிலவுதல் தோற்றம்//

வஞ்சனை கொண்டு வீழ்த்தியும் விடாது இரங்கியும் காத்திடுவாயே //

ஏழைகள் என்று ஏளனம் செய்து வதைத்தலும் ஆகாது பாராய் //

கடுங்கோபம் கொண்டே கத்திகள் எடுத்து உயிரையும் வதைக்காதே //

இயற்கையின் படைப்பில் துரோகமில்லை இடர்களை விதைக்காதே //

வழுவாத குணமும் வாய்மையின் சிறப்பும்
வரமாகக் கொண்டுவிடு //

நஞ்சுவைத்துப் பழகும் மக்கள் மனங்களும் மாறிவிட்டால் //

அஞ்சியும் நடக்கத் தேவையும் இல்லை அகிலமும் பேரொளியே //

துஞ்சிநீயும் துவண்டிட வேண்டாம் எங்கள் மண்ணிதுவே //
போரில்லா உலகம் மாறியே வந்தால் என்றும் புதுமைதானே //

சிவருபன் சர்வேஸ்வரி