சந்தம் சிந்தும் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

தலைவனாக வந்தவன் தந்தையும் என்பார் //
தலையாய கடமையுமவனுக்கு தனித்துவமாக உண்டே //

மகத்தான பொறுப்பும் மலையாகக் கொண்டு //
இகத்தினில் என்றும் போற்று //

பெற்றவர் நன்றாய் பெரும்யுடன் நம்மையும் //

கற்றிடவும் வைத்துமே கருத்தாக வேற்றியும் //
வற்றிடவும் முடியாத வாஞ்சையும் கொள்வார் //

பற்றிடவும் வைக்கும் அன்பு //

செங்கதிராய் ஒளிபரப்பி செந்தூரமாய் மிளிர்ந்து //
சங்கீதம் மிசைத்தும் சாந்தமாக விளையாடியும் //

இரத்தத்தையும் வியர்வையாக்கி இயன்றமட்டும் வேலைசெய்வார் //

தரமாய் நிற்க்கும் உயர்வே //

சிவருபன் சர்வேஸ்வரி