சந்தம் சிந்தும் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

அடிக்கல் அத்திவாரம்
&&&&&&&&&&&&&&&&&&&

அடிக்கல் இல்லையாகில் அத்திவாரம் அமையாது
படிக்கல்லையும் விட்டால்பாரினிலே ஒளியும் கிடையாது

வடிக்கற்களாக கற்கையையும் வழுவாது பற்றியே
மடிக்கற்களாக பாதுகாப்போம் தன் மானமதை

சுவைத்தல் நன்றே சுந்தர அழகுதமிழை
பகைத்தலும் கூடாது பழக்கத்தையும் மாற்றுவோம்
புகைத்தலும் அற்ற புவியையும் உருவாக்குவோம்
இவையணைத்தும் அடிக்கல் இடும் அத்திவாரமே

உறுதியும் கொள்வாய் உணர்வுடன் விழிப்பாய்
மறதியின்றியே மாணிக்கங்களாய் என்றும் எழுவாய்
கருதியும் நின்று காரியம் சிறக்கவே
பருதிபோன்றே எங்கும் துலங்கிடுவாய் நன்றே

சிவருபன் சர்வேஸ்வரி