பெட்டியில் பொலியட்டும்..’
குளிர் காற்று சில்லென வீசியது
குளிர்மை கண்டவுடன் மெல்ல நடங்கியது
குகையாய் இருட்டு வானம் கறுத்தது
குமரி உறுமலில் சில மழைத்துளி வீழ்ந்தது
சந்திரோதயம் சாட்சியாய் நின்றது
இரவியங்கே சிவப்பாக தெரித்து மறைந்தது
சுரபி நிலைக்கு வானம் இருண்டது
பரவி மழைத்துளி பட்டுப்போல் தெறித்தது
மருவிநின்றந்தக் காட்சியைப் பார்த்தேன்
மனங்குளிர இறைவனை வணங்கித் துதித்தேன்
. தண்ணீர் பஞ்சம் மாறி போகட்டும்
தரணியில் புற்களும் செழித்து வளரட்டும்.
புழுதிப்படலம் வீசிநின்ற விடத்தே-
பூ மழை தூவி வசந்தம் வீசட்டும்
பாலைவனம் போலிருந்த இடங்கள்
பசும் சோலையாய் மாறி பூத்துக் குலுங்கட்டும்
கால நிலைகள் கனிவாய் மாறட்டும்,
கனிந்து மனங்கள் பேரின்பமடையட்டும்
கஷ்டம் நீங்க நெற் பயிர்களும் வளரட்டும்
கனக மணிகள் பெட்டியில் பொலியட்டும்,
— கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி.