வியாழன் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி.

தியாகமே, தீர்ப்பானதா?

இனிமையான காலங்களென்று
இலை மறை காயாக நின்று
இலட்சிய வேட்கை கொண்டு
இலகுவாய் மறைந்தது தியாகம்

காளிக்குப் போட்டனர் களப்பலி
களியாட்டத்திற்குப் போட்டனர் நரபலி
கலங்கரை விளக்குகளெல்லாம்
கடுகதியில் சாய்ந்தது அது ஒரு தியாகம்

தீர்ப்பிற்கு தீர்வு திருத்த முடியாத சட்டங்கள்
தினம் தினம் மாறும் திரிவு கொண்ட செயற்பாடுகள்
கேட்பாரற்ரு அந்த தர்மங்கள் விழ்ந்திட
காப்பாற்ற தியாகங்கள் சுடர் விட
மீட்பாரின்றி மிடிமைகள் குவிந்தன
மிகை, மிகையாக ஓடங்கள் சரிந்தன
மிதந்தது நடுக்கடலிலே துடுப்பில்லாக்
கப்பலொன்று
மானமே மான்புமிகு வீரமென்று

படைப்பு இதுவென பரமன் எழுதிவிட்டான்
பரணிமாதாவும் கைவிரித்து நின்றுவிட்டாள்
பாகமொன்றாய் பரணியில் சூழ்ந்தது
தியாகங்களெல்லாம் தீர்ப்பாக சரிந்தனவே,

-கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி.