வியாழன் கவிதை

சிவரூபன்சர்வேஸ்வரி

மார்கழியாய் குளிர்ந்து.விடு
<<<<<<<<<<<<<<<<<

சுடரும்சுறாவளியும்கொண்டதுநம்வாழ்வு
சூதும் வாதும் வைத்துக்கெடுப்பார்
சாதுபோலநீ இருந்தாலும் சங்கடத்தில்சிக்குண்டுதவிக்கவைப்பார்
கோளும் குண்டனியும் சொல்லிநிற்பார்
கோலம்மாறி அங்கேசிக்கவைப்பார்
காலம் நன்மைதான் செய்யும் காப்பான் இறைவன் என்று நம்பு

பாதம்பார்த்துவீழ்ந்து எழு
பரிவாய்பேசிவாழ்ந்துவிடு
வீழும்நிலையைவிரட்டிவிடு
விவேகமாக விரைந்து எழு

தனிமரம்தோப்பு ஆகாது என்பார்
தனித்துவம் இல்லையெனில் -உனக்கு
சிறப்பு இருக்காது
திணிப்பது நன்று எண்ணிவிடலாம்
திங்களில்மார்கழியாய்குளிர்ந்துவிடு

கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி.