சந்தம் சிந்தும் சந்திப்பு 252
“காதலர்”
காதல் செய்வது கடும் குற்றம்
என்ற கருத்து நிலவியது ஒருகாலம்
தோதாய் பார்த்து தாய் தந்தை பொருத்தி
சொல்வார் கல்யாண நாள் இதென்று
ஆளார் கறுப்பா சிவப்பா அழகா
அடாத்து பண்ணும் ஆம்பிளையா
ஏதும் அறியா நிலையே தொடர்ந்தது எங்கள் யாழ்ப்பாண தமிழ் மண்ணில்்
மங்கள மேளம் முழங்க
சங்கு கழுத்து குனிய
மங்கையர் கழுத்தில் தாலி ஏறும்
மறு நாளே கணவன் முகம் முழுதாய் அறிய வரும்
காரில் பள்ளிக்கு போய்வரும் தோழி
காதல் சாரதி மேலாகி
ஓடிப்போன கதைகள் இரண்டு
உண்டான அந்த காலத்தும்
சாதி,சமயம்,அந்தஸ்து பார்த்து
சாதகம் சீதனம் பல பார்த்து
நாங்கள் நல்லாய் வாழ பெற்றோர்
நல்லன செய்தார் அலைந்துலைந்து .
கல்யாணம் முடிய காதல் தொடங்க
சந்தோஷ வாழ்வே சாவரைக்கும்
காதல் வாழ்வு பாதியில் பிரிவும்
சாதலும் காணுது உலகில் எங்கும்
காதல் வாழ்க
கல்யாணம் முடித்து
காதலராகி வாழ்வோமே.
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-