ஓயாது ஓசைதரும் குரல் ஒன்று
ஒவ்வொரு பாமுக நிழ்விலும் எழும் என்றும்
கவிதை,கருத்து,என்று எதையும்
பாராட்டும் ,கருத்தும் பகரும் ,கர்ச்சிக்கும்,
எவருக்கும் தலை வணங்கா மிடுக்கு
எதிலும் சுயம்,பெண்ணியம்,பெருமை
என்று உரைப்பில் சுவைக்க பலது இருக்கும்
திறமை,வீரம் தீரம்,ஓயாத இலக்கிய
பங்களிப்பு
எல்லாம் ஓய்ந்தாலும்
புகழும் பேரும் ஓயாது ஒளிரும்
அதுவே அமரர் கோசல்யாவின் கீர்த்தி