வியாழன் கவி 1690!
பன்மொழி பகர்வோம்!
கற்கை நன்றே காலங் கடந்தும்
பெற்றிடும் பயனே ஊற்றென பெருகும்
மொழியின் வேரும் மொழிந்திடும் பேறும்
விழியென வாழ்வில் ஒளியினைச் சேர்க்கும்!
ஆளுமைத் தேடலில் ஆற்றலின் நீட்டலில்
தோழமை கொள்ளும் பந்மொழி
புலமை
படைப்பினைக் கூட்டும் பக்குவம் ஆக்கும்
மதிப்பினை ஈயும் மாண்புற ஏற்றும்!
தாய்மொழி தரமிக்கதாய் மின்னும்
தனித்தே நம்மை புடமிட்டுக் காட்டும்
வாழ்விட மொழி வளங்களைக் கூட்டும்
வண்ணமாய் வாழ்வியல் கொஞ்சும்!
முயற்சியெனும் ஆயுதம் முன்னே செல்ல
முப்பொழுதும் அதன்வழி அறிவு தள்ள
அகப்படும் நொடிகள் துடுப்பென மாற
வசப்படும் பன்மொழி பல்திறன் நம்மிடம்!
சிவதர்சனி இராகவன்
15/9/2022