வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1824!

எழுத்தின் வித்தே
பூத்தெழும் தமிழே!

வீழ்தல் என்றும்
உன்றனுக்கில்லை
வீணாய்ப் போதலும்
உன்பணி இல்லை
பேரும் புகழும்
உன்றன் சொத்தாய்
வென்றனை நீயும்
புலம்பெயர் மண்ணில்!

உலகம் வியக்கும்
உணர்வில் சிறக்கும்
செம்மொழி என்றோம்
சீர்படக் கற்றோம்
அடுத்த தலைமுறை
எடுத்துனை ஆள
ஏற்றம் கொண்டு
தமக்குள் ஊன்றத்
தொடுத்தது பாமுகம்
எத்தனை வழிகள்!!

எழுத்தின் வித்தே
பூத்தெழுந்த நாற்றே
வான் தொடும் ஆற்றல்
முடிவிலா ஊற்று நீ
மூச்சினில் கலந்தாய்
முடிவிலி உறைந்தாய்
காலனும் கவர்வான்
நீ மட்டும் சாகா வரம்
பெற்றே வாழ்வாய்
ஆசிகள் தந்தோம்
அழகுடை மொழியே!!
சிவதர்சனி இராகவன்
7/6/2023