வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1810!
வெறுமை போக்கும் பசுமை!
வெறுமை போக்கும்
பசுமை -அது
வறுமை போக்கும்
இறைமை
உறையும் பூமி
உயிர்க்க- இறை
வரமாய்ப் பூத்த
நிறைமை!

வியக்க வைக்கும் புதுமை
விழி விருப்பு நல்கும்
பசுமை
உயிர்க்க வைக்கும்
உலகை
உணர்ந்து காத்தல்
கடமை!!

நீரைத் தருதல் குணமே
நிமிர்ந்து நிற்கும் தருவே
சோலை பூக்கும் மணமே
சொர்க்கம் காட்டும்
நற் தாவரமே!

ஓரறிவாய்த் தானிருந்து
ஆறறிவு வாழ வழி நல்கும்
சீராட்டிப் போற்ற நல்
தருணம்
சிலதை நாமும் நடுதல்
உத்தமமே!!

சந்ததி பிழைக்க வேண்டும் –
இங்கு
சரித்திரம் நிலைக்கக்
கூடும்
காடழித்தல் வேண்டாம்
நம் பணியே தாவர நாட்டுகை!!

சிவதர்சனி இராகவன்
10/5/2023