இன்னும் எனக்கு
ஞாபகம்
இருக்கிறது…
போர்வையை
விலக்க மனமின்றி
இறுக்கிப் போர்த்து
படுத்திருந்ததும்…
தண்ணீரை
அள்ளிக் குளிக்க
மனமின்றி
அரைமணி நேரமாய்
அலாசிக்கொண்டிருந்ததும் …
வழி ஓரம் கிடக்கும்
புல் நுனியில்
படர்ந்திருக்கும்
பனித்துளிகளை
தொட்டு இரசித்ததுவும்…
இன்னும் எனக்கு
ஞாபகம்
இருக்கிறது…
சிவராத்திரிக்கு
கண் விழித்ததும்
மக நட்சத்திரத்தில்
மண் தொட்ட மாமனுக்கு
விஷேச அர்ச்சனை செய்ததும்…..
இன்னும் எனக்கு
ஞாபகம்
இருக்கிறது….
குறை மாதக்
குழந்தையே!
இன்னொன்றும்
ஞாபகம்
இருக்குறது…
அசடு வழியும்
காதலர்கள்
அடிக்கடி புலம்பும்
அந்த வார்த்தை
மாசி 14…..
-சாமினி துவாரகன் –
2025.02.04