மாறுமோ மோகம்
ஆசையின் பாதையில் ஓடுகின்ற காலமதில்
அழிவுகளை நோக்கியே ஆடலும் பாடலும்
மூழ்கிடும் நிலையிலே கடன்களும் சூழுமே
வாழ்கின்றோம் என்றுமே வரமுறையில்லாத ஓட்டமும்
தேடுவாரின்றியே சமூகச் சீரழிவுகள்
நாடுவாரற்ற தேசமாய் மாறியே வாழுதே
பாடுவார் ஆடுவார் கூடுவார் கூத்தடிப்பார் என்றுமே
மோகங்கள் கூடுவதால் மேகநோயும் பரவுதே
எத்தனை வகையிலே எத்தனை மோகங்கள்
அத்தனையும் அளவில்லாத அருவருப்பான கோளிக்கைகள்
இத்தனையும் மாறுமோ மானிலம் தளைக்குமோ
கேள்விக்குறிதான் ஜயா மீண்டும் பிரபஞ்சம் பிறக்குமா?
சர்வேஸ்வரி சிவருபன்