சந்தம் சிந்தும் கவிதை

சர்வேஸ்வரி சிவரூபன்

பங்கு நீ
&&&&&&&&

என்னிலே சரிபாகம் ஆனவள் நீயே
எந்தன் காதலியே என்னுயிரும் நீயே
உந்தன் பேச்சினிலே உறைந்துவிட்டேன் நாணும்

உனக்கும் நாணோ பங்காகி நின்றேனே

அன்பிற்கு வெகுமதி உண்டோ சொல்கண்ணே

அணிக்கு தலைவியும் நீதானே என் தாரமடி
கனியும் மனதினிலே
காதல் பயிருமடி
தளைத்து நின்றுமோ கீதமிசைக்குமடி

வளைத்துப் போடுகிறாய் வாளைக் குமரியடி

மலைத்துப் போனேனடி மனைவியே உன்னழகிலே

நானொரு பாதியடி நீயொரு பாதியடி
என்பங்கும் நீயே பக்கத்தில் வாவேனடி

கவிஞர்
சர்வேஸ்வரி சிவருபன்