சந்தம் சிந்தும் கவிதை

சர்வேஸ்வரி சிவரூபன்

வசந்தம்

வசந்தம் கொட்டும் வண்ண நிலவு
சுகந்தம் வீசிட சோகமும் போகும்
இசைக்கும் வசமாய் இன்ப நாதமாய்
பயக்கும் படியே வசந்தம் வீசிடும்

ஏற்றம் கொண்டதும் ஏறுபோல் நடப்பதும்
மாற்றம் கண்டு மகிழ்வைக் காண்பதும்
தாக்கமின்றி வாழ்வு மலர்வதும்
நோக்கும் செயலும் துலங்க நடந்தால்

வீசும் வீசும் வசந்தம் தானே
காசுபணம் சேர்ந்தாலும் கவலையில்லையே வசந்தம்
மாடி கோபுரம் இருந்தாலும் இடரில்லையே அது வசந்தம்
நல்லகுழந்தைகள் மண்ணிலே மலரும் போது வசந்தம்
வசந்தம் தேடிவரும் நாம் நடக்கும் விதத்தினிலே வசந்தம்
சர்வேஸ்வரி சிவருபன்