இதுதான் உலகம்
கற்றுணர்ந்தான் திருவள்ளுவன்
கனி வாய் சொன்னான் திருக்குறளில்
நீதி நிலை பெற்றிட வென்றும்
நீவி விட்டாள் ஔவைப்பாட்டி .
கொற்றம் தளைக்க வேண்டுமென்று -அன்று
நீதி தவறாத மன்னர்களாட்சி .
பேராசை கவி சூழ்ந்ததினால்
பேரழிவுகள் நேர்வது இந்தக் காலம்.
கற்புடமையென்று கண்ணகியும்
மதுரையை எரித்தது சரித்திரமாம்
கற்பின் மகிமை புரியாமல்- இன்று
காலம் சுழன்று நிற்கிறது பார்
சாரம் போட மரமில்லை
சாதித்து நிற்க துணிவில்லை
கொடுப்பார் யாரெனக் கைநீட்டி
கொண்டாட்டம் போடுவார் பாரினிலே,
பசித்தவன் பார்த்து நிற்க்கையிலே
கொடுத்தவன் கை நீட்டிக் கொள்கையிலே
அடுத்தவன் பறித்துப் போகின்றான்
இதுதான் உலகம் புரிந்து கொள்….
கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽