நேரம்
^^^^^^^^^
நேரத்தைக் கணக்கில் கொள்
நேர்மையை வரித்துக் கொள்
தூய்மையாய் நடந்து கொள்
துரிதமாகப் பயணம் செய்
பொன்னான நேரம் மண்ணாகிப் போகாமல்
பொழுது புலர்ந்ததும் கடமைகள் எத்தனையோ
காலமூம் தாழ்த்தாது காரியம் நடக்கவேண்டும்
அலாரம் வைத்து அவசரமாக எழும்பிவிடு
ஆனந்த வாழ்வை அமைதியாக வாழ்ந்துவிடு
இலவு காத்தகிளியாக மாறாதே
இலங்கட்டும் கணிப்பு துலங்கட்டும் துரிதமாக
கேட்காமல் ஓடும் நேரத்தை என்செய்வோம்
சர்வேஸ்வரி சிவருபன்