சந்தம் சிந்தும் கவிதை

சர்ளா தரன்

வலி சுமந்து சென்ற நாடு
விழி சொரிந்து சென்ற காடு
உயிர் தந்த உடம்பு வெந்தது
புகை கொண்டு கலந்தது காற்று
பகை இன்றி வாழ்ந்தவர்
புகையாக போனதுவோ
கலி உலகம் விட்டு பிரிந்ததேனோ

விழி நிமிர்த்தி பார்க்கையில்
வகை தொகையாய் மக்கள்
வந்து கூடியதும்
தொந்தரவின்றி உன் உயிர் போனதும்
தொண்டனாய் நீர் வாழ்நத கொடை ஐயா

மெல்லிய உடலும்
மென்மையான உன் குரலும்
வல்லினம் இன்றிய உன் வளர்ப்பும்
வாய் பிழக்க வைக்குதப்பா
பந்தைய குதிரையாய் ஓடும் என வாழ்வில்
வெந்த உன் உடம்பு
வேதனையை தருகுதப்பா
வல்லவனான உன் உருவம் காணாது
வலிக்குதப்பா என் இதயம்