வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
விடியுமா தேசம்
மன்னர் ஆட்சி மறப்போரில்
மக்கள் எடுத்த அறப்போரே!
கன்னித் தமிழர் வழுவாமல்
கடமை யாற்றிப் பணிபுராந்தார்!
இன்னல் வாழ்வும் குறையவில்லை
ஏற்றம் எதுவும் காணவில்லை!
வன்மை நெஞ்ச மாந்தரினால்
வாட்டி வதைக்கும் வன்முறையே!
மண்ணின் நோயாம் பதவிக்காய்
மதியே அற்றோர் மாய்கின்றார்
விண்ணை மேவ வளர்ந்தாலும்
விடியும் மேன்மை நாட்டிலில்லை
எண்ணம் யாவும் கறைபடிந்தே
இருட்டில் பலரும் வாழுகின்றார்!
வெண்ணை கையில் கிடைத்தாலும்
விரும்மி உண்ண மாட்டார்கள்!
வாய்மை மறையாம் மாண்புமிலை
வாயால் வடையும் சுடுகின்றார்
தாய்மை பெருமை தாங்கவிலை
தகமைச் சான்றில் காரியமாய்
சேய்மை கடமை செய்யவில்லை
செருக்கில் வாழும் சிறியோரும்
தூய்மை வாழ்வும் நிலைக்கவில்லை
தொன்மை தேசம் விடிவதெப்போ?
சரளா விமலராசா சுவிற்சர்லாந்து