சாந்தம் சிந்தும் சந்திப்பு 263 “அழகு “
என் ஊர் அழகு
ஒற்றை திருக்கை வன்டியும்-அதில்
இரட்டைப் பிள்ளைகளும்
முச் சந்தியில் நின்று முனுமுனுப்பும்
கச்சை கட்டிய அப்புவும்
கடைக்கண் பார்வையில்
கல்சட்டைப் பெடியளும்
பந்து திரத்த பத்து வயசில்
பிஞ்ச கால் சட்டையை
பிஞ்சுக் கையால் இழுத்தபடி
பஞ்சாய் பறக்கும் பொடியளும்
ஊர் கோவிலும்
ஊட்டிவிட்ட கைகளும்
ஊரவர் மத்தியில்
உருண்டு ஓடிய திருவிழாவும்
மண்வெட்டியும் மரக்கொத்தும்
மஞ்சள் வானம் காணும்-அந்த
வயல் வெளிகளும்
கொஞ்சி குலாவும்
பஞ்சவர்ண கிளிகளும்
நெஞ்சில் நினைக்கையில்
என் ஊர் அழகு
-சரளா தரன்-