வணக்கம்@
ஈரம்
*****
மொழிதனில் இருந்தது தாகம்
வழிவழி வந்தது மோகம்
விழிதனை நிறைக்குது ஈரம்!
நஞ்சினை உண்டவர் வீரம்
நெஞ்சினை நிறைக்குது பாரம்
அஞ்சன விழிகளில் ஈரம்!
விண்தனில் இருந்து வீழ்ந்தது
மண்தனில் ஓடி வழிந்தது
திண்ணைகள் பண்ணைகள் அழிந்தது
எண்ணங்கள் இன்னமும் ஈரம்!
தாய்நாடு வெகு தூரம்
வாய்தனில் ஊறுது காரம்
விழிதனை நிறைக்குது ஈரம்!
மண்தனை இழந்தது பாரம்
கண்களால் கண்டது கோரம்
எண்ணங்கள் காயாத ஈரம்!
நன்றி வணக்கம்!