வணக்கம்!
பாட்டி!
அந்தநாள் ஓவசியர்
செல்லையாவின் மனைவி
திருப்பதி அவள் நாமம்
திருப்பதிகள் எல்லாம்
திருப்பணி செய்பவள் மனம்
உருகிப் பாடுவாள் பாராயணம் மற்றவரையும் மனம் கரைய வைத்திடுவாள்
திருவிழாக் காலங்களில் அம்பாள் வடிவெடுப்பாள்.
கிடைக்கும் பிரசாதத்தை அக்கம் பக்கம் பங்கீடும் செய்வாள்.
சுறுசுறுப்பான ஆச்சி
விறு வெறு என்று நடந்தே மாவைக் கந்தனின் செல்கையில் சிறியவளாய் நானும் பின்தொடர்ந்த அந்த நாள் ஞாபகம்….
சும்மா இருக்கமாட்டாள்
கைவேலை கைவந்த கலை
ஓலைப் பெட்டி கடகம் நீத்துப்பெட்டி என
விற்பனை செய்து
சம்பாதித்தவள்.
குரும்பை நகரிலிருந்து மானிப்பாய் வரை
வியாபாரம் ஓகோ எண்டு இருந்தது.
சுன்னாகம் சந்தைக்குச்
செல்வாள் சாய ஓலை வாங்க.
வண்ணம் போட்டுக் கைவினையைக்
காட்டியவள்.
இரவிலே கோளறுபதிகம் பாடிக்கொண்டே பெட்டி இழைப்பாள்.
கதைகள் சொல்லிக் காட்டுவாள்.திருப்பரங்குன்றம் என்ற பட்டப் பெயரும் அவளுக்கு இருந்தது .
வாலிபர் கூட்டம் வேண்டுமென்றே பட்டப் பெயரைச் சொல்லிச் சீண்டிப்
பொல்லாத கோபம் வரும் என் ஆச்சிக்கு!
நன்றி வணக்கம்!