வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
தேர்தல்
*********
ஆட்சியைப் பிடிக்க
ஆட்டம் போடுவர்
சூட்சியும் செய்தே சுத்தப் பொய்யும் சொல்லி மக்களைச் சொந்தம் கொண்டாடுவர்
நல்லுறவு வளர்க்கும்
நயவஞ்சகப் பேய்கள்
வாக்குக் கிடைக்கும்வரை வார்த்தை யாலம்
நாக்கில் உழலும் நன்மைகள் செய்வோம்
என்றே உத்தமராய் ஏமாற்றி எண்ணத்தில்
தன்னலம் கொண்டே தலைமைக் கதிரைக்குப்
போட்டி போட முண்டி அடித்துக்
காட்டுவர் திறமை காரியம் நிறைவேற!
உங்கள் எதிர்காலம் எங்கள் கைகளிலென்றே
பொங்கி எழுவர் பொது மேடைகளில்
எத்தனை தேர்தல் எத்தனை ஆட்சி
வந்தாலும்
ஏழை மக்கள் ஏமாற்றப் படுவரே!
நன்றி வணக்கம்!