சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிசங்கர்

வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
பள்ளிப்பருவம்
*******************
துள்ளித்திரிந்த பள்ளிப்பருவம்
அள்ளித் தந்தது
ஆனந்தம் அதிகம்
முன்பள்ளிக்காலமது
முன்னேற்றப் பாதையிலே
மூத்தோர் கரம்உதவ முகிழ்ப்பாய்த் தொடங்கிடுமே
நன்னெறியும்
நல்வழியும் நல்துணை செய்திட
எந்தையும் தாயும் காட்டிய அரிவரி ஆசான்
என்றுமே என்மனத்தில் அரியாசனத்தில்
நான் இன்று நினைக்கிறேன்
நல்லவர் அவர்பெயரை
பன்மடங்கு உச்சரிப்பினும் பெருமையே
இன்முகம் இராமலிங்கம் ஆசான் அவர் வதனத்தில் முக்கோடு விபூதி நெற்றி நிறைத்திருக்கும்
எம்மையெல்லாம் உருவாக்கி வழிகாட்டிய தெய்வம்
ஆசான் மறைந்தாலும்
அவர் உருவம் என்னுள் அசைவாடுகிறது
குள்ளமான குண்டான தோற்றம் கண்டு
பள்ளி விழாக்களில் நாடகத்தில் பன்றி உருவெடுக்க வைத்த ஆங்கில ஆசிரியை சறோஜினி ரீச்சர்
கும்மி நடனமும் ஆட வைத்தார்
குதூகலமான நாட்கள்
சூதுவாது எதுவுமே அறியாப் பருவம்
சாதுவாய் இருந்து சகமாணவருடன் சேர்ந்து சகலதும் மறந்து
சுற்றித்திரிந்த பருவம்
கற்றலில் கண்ணாய் இருந்து
வெற்றிகள் கண்டு பெற்றோருக்குப் பெருமை சேர்த்த பருவம்
அந்தப் பள்ளிக்காலம் மீண்டும் மீண்டும் மீட்டிப் பார்க்க மனத்தினை வருடிச் செல்லும்
வண்ண நினைவுகள்!
பட்டாம் பூச்சியாய்
பறந்து திரிரிந்த காலம்
எட்டாம் வகுப்பினில் பாடசாலை மாறிய காலம்
மகாஜனா வாழ்க்கை மனத்தினை வருடிச் செல்லும் மகிழ்வான காலம்!

நன்றி வணக்கம்