சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
நடிப்பு
*******
அன்பினைக் காட்டுவர்
அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு
உள்ளத்திலே கசப்பு
நாவிலே அன்பு
நழுவிடுமே பின்பு
முகத்திலே வெளிச்சம்
அகத்திலே இருள்
பகர்ந்திடும் பாசம்
கலைந்திடும் வேசம்
உடையிலே உத்தமர்
நடையிலே துரோகிகள்
கபடம் இல்லையென்பர்
கசடை நெஞ்சினில் புதைப்பர்
பேசுவது உண்மையென்பர்
பூசுவது பொய்மை முலாம்
பழிபாவம் சுமக்கிறோமென்பர்
குழியினுள் தள்ளவும் தயங்கார்
காதலைக் கண்ணில் வைப்பர்
கல்யாணம் என்றால்
மண்அள்ளிப் போடுவர்
பார்த்தால் பசு போன்றிருப்பர்
வார்த்தையில் வாலை ஆட்டுவர்
வாஞ்சை காட்டி நடிப்பர்
வஞ்சம் கொண்ட வக்கிரப்போக்கர்
உலகமோ இருட்டு
வலம்வரும் திருட்டு
முகங்களோ அதிகம்
நகர்ந்திட நாமும்
நடிக்கவே வேண்டும்
நல்லவர்க்கு நல்லவராய்க்
கெட்டவர்க்குக் கெட்டவராய்!

நன்றி வணக்கம்!