உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்
கவித்தலைப்பு
பசி!
பசியில்லை என்ற குழந்தைக்கு
பலவகை உணவு படைக்கிறான் ஒரு தந்தை
பசி பசி என்று அழுகின்ற குழந்தையின்
வயிற்றுப்பசியைத் தீர்க்க வழியில்லாமல் திண்டாடுகிறான் இன்னொரு தந்தை ! ஏனிந்த ஏற்றம் இறக்கம்
மாற்றம் வருமா மறுவாழ்வு கிடைக்குமா?
ஒரு நிமிடம் குறும்பட உருவாக்கம்
உருகத்தான் வைக்குமா உள்ளங்களை?
நிறைந்த கருத்து அறைந்து செல்லும் அவனவன் அகத்தினை
முன்னுதாரணமாய்
மனிதநேயம் மிக்க மக்கள்
புனிதராய் ஆவர்!
நனிசிறந்த நற்பணி
நல்லுலகம் படைக்குமே!
அற்றவர் பசி ஆற்றி
உயிர்களைக் காப்பாற்றி
இறைவனைக் காண்போம்!
கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு
வாழ்த்துகளும் நன்றியும் உரித்தாகுக!
திரு.திருமதி . நடா மோகன் அவர்களுக்கும் பெருநன்றி கூறி
அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்!