விழிகளை மூடி
கனவுகள் கோடி
நெஞ்சினில் தேடி
ஓய்வில்லாமல் ஓடி
முடிந்ததொரு பாதி
அடுத்து வரும் மீதி
கற்றுக்கொண்ட நீதி
காலம் கடந்ததிந்த மதி
ஆசை உந்தி விட்ட வேகம்
அனைத்தும் வேண்டும் மோகம்
அடக்க முடியாத தாகம்
ஆடி அடங்குமிந்த தேகம்
என்னுள் ஏதோ ஒரு உணர்ச்சி
என்னைத் தடுக்கும் தளர்ச்சி
எனது அனுபவங்களின் முதிர்ச்சி
என்னை புரிய வைக்கும் வளர்ச்சி
சக்தி சக்திதாசன்