சந்தம் சிந்தும் சந்திப்பு 278. காலை மலர்ந்து விட்டது
கனவுகள் கலைந்து விட்டன
கண்கள் விழித்துக் கொண்டன
கடமைகளை முடிக்க முனைந்திடுவோம்
எம்மைச் சுற்றி எத்தனையோ
எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள்
எண்ணங்களே வாழ்க்கை எனும்
ஏற்றமிக்க நம்பிக்கை ஒளிரட்டும்
நல்லவற்றை எண்ணத்தில் விதைத்தால்
நன்மையே விளையுமெனும் உண்மையை
நெஞ்சினில் கொண்டு உள்ளத்தை
நிறைப்போம் மகிழ்வுக் கணங்களால்
நிகழ்ந்தவற்றைக் கிடப்பில் போட்டு
நடப்பவற்றை மகிழ்வுடன் ஏற்று
நாளைகளை நம்பிக்கையுடந் நோக்கி
நடந்திடுவோம் வெற்றியாய் வாழ்வில்
நடந்தவை அனைத்துமே நன்மைக்கே
நடந்தவை என்பதை ஏற்றிட்டால்
நடப்பவை எல்லாமே எப்போதும்
நன்மையாய் நடப்பதே சத்தியம்
அவனியில் ஆன்மாவின் சாத்திரம்
அனுபவத் தேடலின் யாத்திரை
ஆன்மீக அறிவியல் மாத்திரம்
அழியாத ஆன்மாவின் செல்வமே
சக்தி சக்திதாசன்